UPCOMING EVENTS                 5th Annual World Tamil Badminton Federation Tournament to be Held on July 29th & 30th 2017 in Epic Sports Badminton 39 Bertrand Ave, Scarborough, ON , Canada.

பொதுநோக்குடையவர்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டெனிஸ்வரன்…

18.02.2017 மன்னார்
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் 20 வயதிற்கு குறைந்த பட்மின்டன் பூப்பந்தாட்ட வீரர் வீராங்கனைகளை ஒன்றிணைத்து உலக தமிழ் பூப்பந்து பேரவையின் (WTBF) அனுசரணையுடன் மன்னார் மாவட்டத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் இரண்டு தினங்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் 20 வயதின் கீழான வடமாகாண பூப்பந்து அணியை உருவாக்கும் செயல்திட்டமும் 18/02/2017 சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு அரங்கின் உள்ளக மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் இவ் விசேட பயிற்சி பட்டறைக்காக கனடாவில் இருந்து உலக தமிழ் பூப்பந்து பேரவையின் (WTBF) சார்பாக வருகை தந்த ஜெயகாந்தன் அவர்களும் மன்னார் மாவட்ட பூப்பந்து சங்கத்தின் தலைவர் மற்றும் விளையாட்டு அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். குறித்த பயிற்சி பட்டறையில் வடக்கு மாகாணம் தழுவியதாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர் அத்தோடு இதில் இருந்து உருவாகும் வடக்கு அணியினர் எதிர்வரும் ஆடி மாதம் கனடாவில் நடைபெறவுள்ள பூப்பந்து சுற்றுப்போட்டிக்கு செல்லவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் இந்த பூப்பந்து பயிற்சி பட்டறைக்கு வருகைதந்துள்ள அனைத்து மாணவர்களையும் பாராட்டி கிடைக்கப்பெற்றுள்ள சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்தி எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ளுங்கள் என்று வாழ்த்துக்கள் கூறியதோடு குறிப்பிடட நிகழ்வை ஏற்பாடு செய்த வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். அத்தோடு விசேடவிதமாக கனடாவில் இருந்து வந்துள்ள பயிற்சியாளரை பாராட்டியதோடு இதுபோல பொது நோக்கோடு செயல்படும் சமூகத்தை தாம் வரவேற்பதாகவும், தற்போதைய காலத்தில் எதனை எடுத்தாலும் ஏதாவது ஒரு இலாபத்தோடு செய்கிறவர்கள் அதிகமாக உள்ளபோது இவ்வாறு அனைவருக்குமோர் முன்னுதாரணமாக திகழ்பவர்களை எமது மாகாணம் வரவேற்பதாகவும், ஒரு விடயத்திற்கு நிதி உதவி வழங்குவதற்கு அப்பால் தங்களது அனுபவங்களையும் திறமைகளையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எமது சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கோடான ஓர் சமூகம் உருவாகுவதையே தாம் வரவேற்பதாகவும், அவ்வாறு அனைவரும் சிந்தித்து செயற்படுவோமானால் நிச்சயமாக நமது மாகாணமும் அனைத்து மாவட்டங்களும் ஓர் சிறப்பான இடத்தை எதிர்காலத்தில் எட்டும் என்பதில் ஐயமில்லை என்று தெரிவித்ததோடு தனது 2017 ஆம் ஆண்டிற்கான நிதியில் இருந்து வடமாகாண பூப்பந்து சங்கத்திற்கும் மன்னார் மாவட்ட பூப்பந்து சங்கத்திற்குமாக ரூபாய் ஒரு இலட்சம் தருவதாகவும் உறுதியளித்தார்.

WORLD TAMIL BADMINTON FEDERATION PURPOS

Annual Tournaments in World
90%
Introducing the game of badminton by game-free for their psychological damages North East Sri Lankan
60%
Annual Tournaments in North East Sri Lanka
75%
Helping children under the poverty line in North East Sri Lanka
50%

WTBF Tournament Participant

2013 SWISS
110
2014 FRANCE
189
2015 ENGLAND
310
2016 GERMANY
349

WTBF நோக்கம்:

தமிழ் மக்கள் மத்தியில் பூப்பந்தாட்ட விளையாட்டினை ஊக்குவித்து உலக தரத்திற்கு கொண்டு வருதல்.

தமிழர் வாழும் நாடுகளில் சுழற்சி முறையில் வருடம் தோறும் போட்டிகளை நடத்துதல், அதன் மூலம் அந்த நாடுகளில் விளையாட்டினை ஊக்கப்படுத்தல்.

பூப்பந்தாட்ட விளையாட்டின் மூலம் புலம்பயர்ந்து வாழும் எம் மக்களை (அந்தந்த நாடுகளில் வாழும்) அந்நாட்டு மக்களுடன் இணைந்து வாழ்தலை ஊக்குவித்து அந் நாட்டின் பூப்பந்தாட்ட கழகங்களில் அவர்களை அங்கத்தவராக்குதல்.

பூப்பந்தாட்ட ஆர்வலர்களுடனும் வல்லுனர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த நாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் இந்த விளையாட்டு நுட்பங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் பூப்பந்தாட்ட விளையாட்டினை அறிமுகப்படுத்தி அவர்கள் தங்கள் உளவியல் பாதிப்பை பூப்பந்தாட்ட விளையாட்டின் மூலம் விடுபடச் செய்வதற்கான உதவிகளைச் செய்தல்.

நாம் பிறந்த மண்ணில் வருடம் தோறும் போட்டியை நடத்துதல்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பிள்ளைகளுக்கு உதவுதல்.

Visitor Map

6 visitors online
5 Guests, 1 Members online

WE WOULD LOVE TO HEAR FROM YOU,

CONTACT

Hello World

Please give us Feedback to efficient develop!

Thanks 

admin@nottwil.wtbf.net

Guestbook

Write a new entry for the WTBF Guestbook

 
 
 
 
 
 
Fields marked with * are required.
Your E-mail address won't be published.
For security reasons we save the IP address 54.144.194.161.
It's possible that your entry will only be visible in the WTBF guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
wtbf2017 wtbf2017 wrote on 15/02/2017 at 3:50 PM:
Hello World Please give us Feedback to efficient develop! Thanks admin@nottwil.wtbf.net