இன்று மட்டக்களப்பு பேபர்  உள்ளரங்கு திறப்பு  WTBF ன் பயிற்சி முகாம்  ஆரம்பம்.
இன்று 6 9 2018 மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் புதிதாக அமைந்துள்ள உள்ளரங்க விளையாட்டு அரங்கு  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதனை மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு. தி. சரவணபவன் அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்க,  பிரதி முதல்வர்  திரு.க.  சத்தியசீலன், மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திரு கே பாஸ்கரன், பிரதி ஆணையாளர் நா. தஞ்சயன், வீதிப் போக்குவரத்து பொறியிலாளர்  சசிநந்தன், நிர்வாக உத்தியோகஸ்தர்  திருமதி ரோகினி மற்றும் கௌரவ உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் அனுசரணையுடன், மட்டக்களப்பு  வலய கல்வி அலுவலகம், மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கம்,  WTBF ன் இலங்கை கிளையும்  இணைந்து நடாத்தும் ,பாடசாலை தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ளும், பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் இன்றும் நாளையும் இரண்டு தினங்களும் (6 / 7 Sep. 2018) நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கான பயிற்சியினை WTBF ன் (கனடா )ஆரம்பகால உறுப்பினரும் பயிசியாளருமாகிய திரு ஜெயகாந்த் அவர்களும் , WTBF ன் இலங்கை கிளையின் தலைவரும், வடமாகாண பூப்பந்தாட் ட பயிசியாளருமாகிய திரு கமலன் அவர்களும் இணைந்து பயிற்சிகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்
மட்டக்களப்பு முதல்வர் அவர்களின்  தனி முழு முயற்சியினால், நீண்டகாலம் கட்டப்பட்டு திறக்காமல் இருந்த உள்ளரங்க விளையாட்டு மண்டபத்தினை இன்று திறந்து வைத்தது, மட்டு வாழ்மக்களுக்கு பெரும் கொடையாகும்.  மாநகர முதல்வர் திரு. தி. சரவணபவன் அவர்களுக்கு உலக மக்கள் சார்பாக, உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை மகத்தான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து விளையாடு துறைகளிலும்   முக்கியமாக பூப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியில் முன்னணி வகிப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *