பிரான்ஸில், 27-10-2018 சனிக்கிழமை.அன்று Goussainville Neloson Mandela பூப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்று முடிந்த உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை, ஃபிரான்ஸ் பிரிவின் ( WTBF-France) இரண்டாவது சுற்றுப் போட்டி வெகு சிறப்பாக நடந்தேறியது…..

இதில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள் . நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு வீரர்களை கொண்டு 95 போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது…….

நடத்தப்பட்ட போட்டிகளில் பெரும்பாலான போட்டிகள் மூன்றாவது போட்டி வரை சென்றுமிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது

குறிப்பாக சிறுவர்களுக்கான மற்றும் open பிரிவுப்போட்டிகள் மிக மிகத்தரமான நிலையில் இருந்ததை அவதானிக்க முடிந்தது

மேலும் இப்போட்டிக்கு Lyon நகரிலிருந்து கூட போட்டியாளர்கள் வந்து கலந்து கொண்டிருந்தமை பாராட்டப்படவேண்டிய விடயம்.

போட்டி முடிவுகள்

::::::: MEN :::::::

U-13

SINGLE

WINNER == DINESH
RUNNER == ARUSH

DOUBLE

WINNER == DINESH & ARTHUR
RUNNER == ABINESH & ARUSH

###$$$$$$$########

OPEN

SINGLE

WINNER == ANNAMALE
RUNNER == FREDERICK

DOUBLE

WINNER == ANNAMALE &
FREDERICK

RUNNER == NISHANTHAN &
VAISHNAVAN

####$$$$$$$#######

O+40

SINGLE

WINNER == SINNAPPA
RUNNER == SUTHARSHAN

DOUBLE

WINNER == SURESH
& SINNAPPA
RUNNER == JEYARAMAN
& ROCH

#######################$$$$$$#####

::::::: WOMEN :::::::

U-13

SINGLE

WINNER == ANUSHKA
RUNNER == INES

####$$$$$$#####

OPEN

SINGLE

WINNER == SARUJA
RUNNER == REBECCA

DOUBLE

WINNER == REBECCA &
ANUSHKA
RUNNER == DIVYA & PAVANITHA

::::::: MIXED :::::::

WINNER == RAJESH & REBECCA
RUNNER == RAHUL & ANUSHKA

சுவிஸ் நாட்டில் உலகத்த தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் சுவிஸ் கிளையின், 5 வது தடவையாக நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டி இன்று (27.10.2018) வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
காலை ஒன்பது மணிக்கு மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து WTBF இன் சுவிஸ் கிளைத் தலைவர் திரு சஜீவன் தியாகராஜா அவர்கள் உரையினைத் தொடர்ந்து, திரு ரோமன் அவர்கள் போட்டி நிபந்தனைகள், விதிகளை விரிவாக விபரித்தார். அதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியாது.

ஆண் பெண்களுக்கான தனிநபர், இரட்டயார் ஆட்டம், கலப்பாட்டம் என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் சுமார் 40 போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். நடை பெற்ற போட்டியில் அனைத்து இனத்தவரும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. இதனால் பல சுவிஸ் நாட்டவர்களும் இணைந்து விளையாடியது மகிழ்வாக இருந்தது.
விளையாடடுகள் யாவும் தரமானதாக அமைந்திருந்ததுடன் WTBF இன் சுவிஸ் கிளை அழகான முறையில் ஒழுங்கமைத்திருந்தது குறித்து அனைவராலும் பாராட்டப்பட்டது.
இறுதி நிகழ்வாக பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு கிண்ணங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. போட்டிகள் யாவும் இரவு ஏழு மணிக்கு நிறைவுக்கு வந்தன.

பரிசு பெற்றோர் விபரம்
Mens single Open :
1. Sanmugalingam Delinson (VD)
2. Manuel Sommerhalder (AG)
3. Arulpragasam Vinoj (NW)
4. Thiyagarajah Sujeevan (LU)
5. Kunam Lutharsanen (AG)

Mens double Open :
1. Kunam Lutharsanen (AG) / Manuel Sommerhalder (AG)
2. Andavar Prakash (ZUG) / Thiyagarajah Jeyakumar (ZUG)
3. Nagathambiran Kathirkaman (VD) / Sanmugalingam Delinson (VD)
4. Kumbalingam Balaji (LU) / Sinnathurai Luxmikanth (LU)

Ladies single Open :
1. Suseharan Jeyaselvi (ZH)
2. Rajakumar Geeva (ZUG)
3. Selvakumar Lavanja (ZUG)
4. Vigneswaran Vinusia (AG)

Mixed double Open :
1. Selvakumar Selvanayagam (ZUG) / Selvakumar Lavanja (ZUG)
2. Vigneswaran Vinusia (AG) / Sabanayagam Mathan (AG)
3. Panchalingam Sanjith (ZUG) / Ratnasigamani Sarandya (LU)
4. Rajakumar Geeva (ZUG) / Selvakumar Piraveen (ZUG)

இன்று மட்டக்களப்பு பேபர்  உள்ளரங்கு திறப்பு  WTBF ன் பயிற்சி முகாம்  ஆரம்பம்.
இன்று 6 9 2018 மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் புதிதாக அமைந்துள்ள உள்ளரங்க விளையாட்டு அரங்கு  உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதனை மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு. தி. சரவணபவன் அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்க,  பிரதி முதல்வர்  திரு.க.  சத்தியசீலன், மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் திரு கே பாஸ்கரன், பிரதி ஆணையாளர் நா. தஞ்சயன், வீதிப் போக்குவரத்து பொறியிலாளர்  சசிநந்தன், நிர்வாக உத்தியோகஸ்தர்  திருமதி ரோகினி மற்றும் கௌரவ உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் அனுசரணையுடன், மட்டக்களப்பு  வலய கல்வி அலுவலகம், மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சங்கம்,  WTBF ன் இலங்கை கிளையும்  இணைந்து நடாத்தும் ,பாடசாலை தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்ளும், பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் இன்றும் நாளையும் இரண்டு தினங்களும் (6 / 7 Sep. 2018) நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கான பயிற்சியினை WTBF ன் (கனடா )ஆரம்பகால உறுப்பினரும் பயிசியாளருமாகிய திரு ஜெயகாந்த் அவர்களும் , WTBF ன் இலங்கை கிளையின் தலைவரும், வடமாகாண பூப்பந்தாட் ட பயிசியாளருமாகிய திரு கமலன் அவர்களும் இணைந்து பயிற்சிகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்
மட்டக்களப்பு முதல்வர் அவர்களின்  தனி முழு முயற்சியினால், நீண்டகாலம் கட்டப்பட்டு திறக்காமல் இருந்த உள்ளரங்க விளையாட்டு மண்டபத்தினை இன்று திறந்து வைத்தது, மட்டு வாழ்மக்களுக்கு பெரும் கொடையாகும்.  மாநகர முதல்வர் திரு. தி. சரவணபவன் அவர்களுக்கு உலக மக்கள் சார்பாக, உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவை மகத்தான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில் அனைத்து விளையாடு துறைகளிலும்   முக்கியமாக பூப்பந்தாட்டத்தில் தேசிய ரீதியில் முன்னணி வகிப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.

எதிர்வரும் 6ம் 7ம் செப்டம்பர் 2018 மட்டக்களப்பு நகரில் பேபேர் உள்ளரங் கு மைதானத்தில் 15 வயதிற்கு குறைந்த (ஆண், பெண்) மாணவர்களுக்கான பூப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.


பயிற்சி முகாமினை மட்டக்களப்பு பூப்பந்தாட்ட சம்மேளனம், வலயக்கல்வி அலுவலகமும், உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் இலங்கைக் கிளையும் இணைந்தே உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அனுசரணையில் நடை பெறுகிறது.

 

வெகுவிரைவில் WTBFஇன் அவுஸ்திரேலியக்கிளையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பட்மின்ரன்துறை வளர்ச்சியை மையப்படுத்தி பட்மின்ரன் போட்டியொன்றும் நடாத்தப்படவுள்ளது.

WTBF இன் நோர்வேக் கிளையின் கிளிநொச்சி மாவட்ட பூப்பந்தாட்டப் போட்டி – 2018

WTBF இன் நோர்வே கிளையினால் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தத இப் போட்டியினை. WTBF இன் இலங்கை கிளையின் தலைவர் திரு கமலன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார். இப்போட்டிகளின்போது WTBF இன் செயலாளர் திரு ரமேஷ் அவர்கள் நேரடியாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

கடந்த சனியன்று ( 14.07.2018 ) கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற Badminton போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தினை மட்டும் மையப்படுத்தி இங்குள்ள பட்மின்ரன் விளையாட்டில் ஈடுபட்டுவருகின்ற ஈடுபடவிரும்புகின்ற வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக இப்போட்டி ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் தொடர்ந்தும் இம்மாவட்ட வீரர்களை வளப்படுத்த இவ்வாறான போட்டிகள் ஒரு தொடர்முறையில் இடம்பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . நடைபெற்ற அந்தப் போட்டியில் சிறந்த சில வீரர்கள் காலனி மற்றும் Racket இல்லாமல்கூட வந்து கலந்து கொண்டனர். எதிர்பார்த்ததை விட அதிகதிறன் படைத்த வீரர்களை இனம்காணக்கூடியதாக இருந்தது.வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றி கிண்ணம் மற்றும் பண பரிசுகளும் வழங்கப்பட்டது . அத்துடன் சிறந்த இளம் வீரர்களுக்கு Racket களும் பரிசாக வழங்கப்பட்டது . சிறப்பாக நடைபெற்ற போட்டியை நடாத்த முழுஉதவி செய்த திரு கமலன் ( president WTF srilanka Branch )அவர்களுக்கும் WTBF Norway Branch members திரு யோகன், திரு பழனி, திரு மோகன் மற்றும் திருமதி யாழினி நாதன் அவர்களுக்கும் நேரடியாகக் கலந்துசிறப்பித்திருந்த WTBF இன் செயலாளர் திரு ரமேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டி முடிவுகள்

Under -15 boys

single Champion – M.Jathursan -KMV
Runner up – P.Nilojan- KMV

Doubles Champion -M.Jathursan& M.Kaviraj -KMV
Runner up – P.Nilojan & K.Silojan – KMV

Under -15 Girls

single Champion -K.Risanuya- KHC
Runner up – R.Themilini KHC

Under -17 Boys

Single Champion – A.Anujan – KHC
Runner up – K.Kajan –KHC

Double Champion – K.Kajan & A.Anujan – KHC
Runner up – Thikalarasan & Rakulan- KHC

Under -19 Boys

Single Champion – M.Sanujan – KMV
Runner up – M.Sathusan-KMV

Doubles Champion -M.Sahusan & M.Sanujan- KMV Runner up – K.Sopithan & U.Kajathipan -KHC

Open Men

Single

Champion – K.Kajan -KHC
Runner up – M.Sathusan – KMV

Doubles
Champion – M.Sahusan & M.Sanujan KMV
Runner up – K.Kajan & A.Anujan KHC

Open Woman

Single
Champion -K.Risanuya – KHC
Runner up – V.Vithusa KHC