உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால்  வடமாகாண கல்வி அமைச்சின் அனுசரணையுடன் கிளிநொச்சி உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில்  ஒகஸ்ட் மாதம் 23 ,24 ,25 ஆகிய தினங்களில் வடமாகாண ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கு பெறவுள்ள அணிகளுக்கான பூப்பந்தாட்டப்பயிற்சி பட்டறை நடைபெற்றது .

 

வடக்கு ,கிழக்கின் எட்டு மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்த  இந்தப் பயிற்சி பட்டறையில் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் செயலாளர் திரு ரமேஷ் விநாயகம் ( நோர்வே)  இலங்கை சார் பட்மின்ரன்துறை அபிவிருத்திக்கான நிர்வாக இயக்குனர்  திரு அன்ரனி ஜெயக்காந்த்( கனடா),,மற்றும் இலங்கைக்கிளை நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தார்கள் .

 

அத்துடன் இந்நிகழ்வை  சிறப்பாக ஒழுங்கமைத்துதவிய மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு M.R மோகனதாஸ் , மாவட்ட இணைப்பாளர் திரு L அனுராகாந்தன்   அரங்கன் பிறின்சன் ஆகியோரும் பங்கு பற்றியிருந்தார்கள் .

ஆரம்ப நாளன்று  பிரதம விருந்தினர்களாக திரு s. வேல்நிதி( பிரதம கணக்காளர்) திரு p. குகபாலன் ( ( பிரதம கணக்காய்வாளர் ) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்

 

இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிநிதியாக திரு R. ராஜசீலன் ( Assitant Director sports-Nothern province) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்ததுடன் பங்குபற்றிய வீரர்களை பாராட்டி ஊக்குவித்திருந்தார்.

 

3 ம் நாள் நிகழ்வில் பிரதம அதிநிதியாக wtbf இன் ஸ்தாபகரும் நிர்வாக இயக்குனருமான திரு கந்தையா சிங்கம் ( சுவிஸ் ) கலந்து சிறப்பித்திருந்தார்

 

இந்த பயிற்சி முகாமின் பயிற்சியாளர்களாக முன்னாள் இலங்கையின் தேசிய பயிற்சியாளர் திரு நல்லதம்பி தற்போதைய வடமாகாண பயிற்சியாளர் திரு கமலன் கனடாவின் முன்னணி பயிற்சியாளர்களான திரு அன்ரனி ஜெயக்காந் திரு தேவாஆகியோர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கு உதவியாக முன்னணி வீரர்களான G .தனுக்காந் R.ஜுதாகரன் M.சதுர்ஜன் N.தர்மிதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கஉதவினர்.

 

கலந்து கொண்ட மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களுக்கும் பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன .

இந்த பயிற்சி முகாமில் மாணவர்களுக்கான உடல் வலுவூட்டல் ,திறன்விருத்தி  நுட்பங்கள் பயிற்றுவிப்பாளர்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

 

மூன்று நாட்களும் உலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் மாணவர்களுக்கான காலை மதிய இரவு உணவுகளும், குளிர்பானங்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன

 

இந்த நிகழ்வினை சிறப்பாக நடாத்த கிளிநொச்சி மாவட்ட பூப்பந்தாட்ட சங்கமும் வடமாகாண பூப்பந்தாட்ட சங்கமும் உதவிகளை வழங்கியிருந்தது.

 

புதிதாக அமைக்கப்பட்ட கிளிநொச்சி உள்ளரங்க விளையாட்டு மைதானத்தின் கட்டுமானத்தில் இருந்த குறைபாடுகள் காரணமாக பயிற்சிகளில் தடைகள் ஏற்பட்டபோதும் தடைகளையும் தாண்டி பயிற்சி முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது .

 

தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்குபெற இருக்கும் மாணவர்களுக்கு உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் கனடாக்கிளை மற்றும் தாயக விளையாட்டுத்துறைசார் அபிவிருத்தி நலன் விரும்பிகளான கனடா வாழ் திரு திருமதி  ராஜலிங்கம் ஒத்துழைப்புடன்  சீருடைகள் பாதணிகள் மற்றும் Rackets என்பனவும்  திரு ஏகாம்பரம் கிருபாகரன் அவர்களால் 3 நாட்களிற்குரிய உணவும் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.