உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஏற்பாட்டில், இலங்கையின் 4ஆவது பூப்பந்தாட்டப் போட்டி

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஏற்பாட்டில், இலங்கையின் 4ஆவது பூப்பந்தாட்டப் போட்டி இன்று காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையில்
4ஆவது தடவையாக இடம்பெறும் குறித்த போட்டி இம்முறை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போட்டி 25ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதி வரை 3 நாட்களாக இடம்பெறுகிறது.

இந்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்வான இன்று பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், கௌரவ விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக உலகப்பூப்பந்தாட்டப்பேரவையின் ஸ்தாபகரும் தலைவருமாகிய திரு கந்தையா சிங்கம் அவர்களும் கனடாவில் நடந்துமுடிந்த 5 வது உலகக்கிண்ணப்போட்டிகளின் தலைவர் திரு ஜெயக்காந் செயலாளர் திரு வாகீசன் ஆகியோரும் கலந்துசிறப்பித்திருந்தார்கள்.

சிறப்பாக மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து 40 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள் இவ்வாறு கலந்துகொண்டமாணவர்களுக்கு WTBF இன் தலைவர் திரு சிங்கம் அவர்களினால் RACKET க்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது இவ்வுதவி பிரான்ஸ் மோகன் நகைமாளிகை நிறுவனத்தால் பிரான்ஸ் WTBF கிளைக்கூடாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

கனடாவில் இருந்து வருகைதந்திருந்த WTBF கனடா கிளை பிரதிநிதிகளான திரு ஜெயக்காந் திரு வாகீசன் ஆகியோரினால் வவுனியா மட்டக்களப்பு யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகளிடம் பயிற்சி உபகரணமான Badminton Shuttlecock Launcher வழங்கும் நிகழ்வும் இச்சந்தர்ப்பத்தில் நடந்தேறியிருந்தது.

இப்போட்டிகள் சிறப்பாகநடந்தேற அனைத்து கள ஒழுங்கமைப்புக்களையும் WTBFஇன் இணைப்பாளர்களும் வடமாகாண விளையாட்டுத்துறைத்துறை அதிகாரிகளுமான திரு பிறின்ஸ் திரு கமலன் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தார்கள் இப்போட்டிநிகழ்வில் ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றுவதும் ஓர் முக்கிய அம்சமாகும்.